ஆடு மேய்க்கச்சென்ற பெண்ணை ஆற்றுக்குள் மீன் பிடித்தவர்… வன்கொடுமை செய்து கொடூர கொலை

 

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை ஆற்றுக்குள் மீன் கொடுத்துக் கொண்டிருந்த இளைஞர் சில்மிஷம் செய்ததில் மூச்சிரைக்க தப்பியோடியும் கால் இடறி கீழே விழுந்துவிட்டதால் காட்டுக்குள் தூக்கி சென்று வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சூழியக் கோட்டை கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

சூழியக் கோட்டை கிராமத்தில் திருமணமாகாத 33 வயது பெண் கனகவல்லி. இவர் தினமும் காலை 8 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். மீண்டும் 6 மணிக்கு வீடு திரும்பி விடுவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று காலையில் அவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலையில் ஆடுகள் மட்டும் தனியாக வீடு திரும்பி இருக்கின்றன. கனகவல்லி வீடு திரும்பவில்லை.

இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும் உறவினர்களும் விளக்கமாக ஆடு மேய்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் சென்று தேடியிருக்கிறார்கள். அப்போது கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த இருக்கிறார்.

அவரை பார்த்ததும் அலறிய உறவினர்கள் உடனே உறவினர்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் கிடைத்த மீன் பிடிக்கும் தூண்டில் முள்ளை கண்டுபிடித்தனர்.

அதை வைத்து நடந்த விசாரணையில் அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்ற 28 வயது இளைஞர் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்தான் கனகவல்லியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

வடவறை கரையில் மீன் பிடிப்பது பெரியசாமியின் வழக்கம். அப்படித்தான் கனகவள்ளிக்கு இதை பெற்றோரிடமும் உறவினர்களிடமும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார் கனகவல்லி. சம்பவத்தன்று கனகவல்லி அனுபவித்தே தீர வேண்டும் என்று நெருங்கி வந்திருக்கிறார் பெரியசாமி. இதை புரிந்துகொண்ட கனகவல்லி தப்பி ஓடியிருக்கிறார் . விடாமல் துரத்திறிருக்கிறார் பெரியசாமி .

Contact Us