கலியாணம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை? யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள எச்சரிக்கை!

 

பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்துக்கும் தடைவிதிக்கும் நிலை ஏற்படும் என யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை எச்சரித்திருக்கின்றது.

இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்கள் பொது இடங்களில் நடந்துகொள்ளும் விதம் கவலையளிக்கின்றது. குறிப்பாக பொதுப் போக்குவரத்து மற்றும் திருமண நிகழ்வுகளில் பொதுமக்கள் எந்தவிதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது சமூகப் பொறுப்பின்றி நடக்கின்றனர்.

பஸ்ஸில் முகக்கவசத்தை முறையாக அணியாமல் பயணிக்கின்றனர். நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் இதனைக் கண்காணிக்க வேண்டும்.

அதேசமயம் வீடு மற்றும் மண்டபங்களில் இடம்பெறுகின்ற திருமண வைபவங்களில் 100 பேருக்கு அனுமதி பெற்று விட்டு ஆயிரம்1,000 பேர் வரையில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காது கலந்து கொள்கின்றனர்.

திருமண மண்டபங்களில் தடுப்பூசி அட்டைகளைக் கண்காணிக்குமாறு சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ள போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

அத்துடன் வீடுகள், மண்டபங்களில் சமைப்பவர்கள் தடுப்பூசி பெறாதவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான பொறுப்பற்ற தன்மை தொடர்ந்தால் வைபவங்களை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us