சல்லடை போட்டு சலித்தெடுத்த புதிய கண்ணம்மா? அச்சு அசல் ரோஷினி போலவே இருக்காங்களே!

விஜய் டிவியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்புடனும் சென்று கொண்டிருக்கக்கூடிய நாடகம் பாரதிகண்ணம்மா. இந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, டிஆர்பி ரேட்டிங்கிளும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நாடகத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரோஷினி. திடீரென்று இந்த நாடகத்தில் இருந்து நடிகை ரோஷினி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏனெனில் நடிகை ரோஷினிக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பொருத்தவரை கருப்புநிற கதாநாயகியாகவும், அதே சமயத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் வடிவமைத்துள்ளனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி, ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் விலகுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இவருக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று பாரதி கண்ணம்மா குழுவினர் குழப்பமடைந்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகையை ஜல்லடை போட்டும், வலை வீசியும் தேடி வருகின்றனர்.

அண்மையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில், யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்ராவை நடிக்க வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us