“ஏழு மாச கர்ப்பத்தை எப்படி மறைச்சே..”? -பக்கத்து வீட்டு வாலிபரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு 16 வயதான பெண் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் தாயாருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது .அதனால் அவர் அடிக்கடி அந்த 16 வயதான மகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு அங்குள்ள புற்று நோய் சிகிச்சை மையத்துக்கு சென்று விடுவார் .அந்த பெண் தனியாக இருப்பதை அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு 22 வயதான வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார் .

அதன் பிறகு அந்த வாலிபர் அந்த தனியாக இருக்கும் அந்த பெண்ணை மிரட்டியே பலமுறை கடந்த ஏழு மாதங்களாக பலாத்காரம் செய்தார் .மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கூறினார் .அதனால் அந்த பெண் பயந்து போய் அவர் எப்போது கூப்பிட்டாலும் அவருடன் உறவுக்கு வந்தார் .அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமானார் . அந்த பெண் தன்னுடைய கர்ப்பத்தை வெளியே சொன்னால் தன்னுடைய தாயார் திட்டுவார் என்று பயந்து அதையும் வெளியே சொல்லாமல் மறைத்து வந்தார் .

அதன் பிறகு அந்த பெண் வயிறு வலியால் துடித்ததை பார்த்து அந்த பெண்ணின் தாயார் விசாரித்த போது அந்தப்பெண் பக்கதது வீட்டு வாலிபரால் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த தாயார் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் அந்த வாலிபர் மீது புகார் கொடுத்தார் .பொலிஸார் வந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us