பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி…. பிரபல நாட்டு எல்லையில் பரபரப்பு….!!

 

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில், பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் போலீசார் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் காவல்துறை அதிகாரிகள் சிலர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது, இந்த தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us