தாக்கல் செய்யப்பட்ட மனு…. இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகள்…. வெளிவந்த முக்கிய தகவல்கள்….!!

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை Global Rights Compliance என்ற உலகளாவிய உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த மனுவில் இலங்கை அரசின் முக்கிய அதிகாரிகளை கைது செய்து உரிய நேரத்தில் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இலங்கை அரசின் தற்போதைய அதிபரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு முன்னாள் ராணுவ அதிகாரியான கமல் குணரட்ண, முன்னாள் ராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரிய, இலங்கை குற்ற மற்றும் பயங்கரவாத விசராணை பிரிவு அதிகாரியும் துணை போலீஸாருமான சிசிர மென்டிஸ், 2002 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர்கள், சிறப்பு அதிரடிப்படை பிரிவின் கட்டளை அதிகாரிகள் ஆகியோரின் பெயர் அதில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக ஆள்கடத்தல், சட்டத்திற்கு புறம்பான குற்றங்கள், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுதல், சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான உரிமைகளை மறுத்தல், துன்புறுத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்று குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Contact Us