“ஒண்ணா வேலை பாக்குறது ,உன்னோட ஒண்ணாயிருக்கவா ?”-அடுத்து அந்த பெண்ணுக்கு பகலிலேயே நேர்ந்த கதி

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில்30 வயதான கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்க தொடங்கினார்.

அதன் பிறகு அந்த நபர் அந்த உஷாவிடம் பலமுறை தன்னுடைய காதலை தெரிவித்து ,அவரோடு பல இடங்களுக்கு வருமாறு கூப்பிட்டார் .அதை கேட்டு கோபமான உஷா அவரை திட்டி அனுப்பிவிட்டார் .அதனால் கோபமான அந்த வாலிபர் அந்த உஷாவை பழி வாங்க துடித்தார் .

பிறகு கடந்த வாரம் ஒரு நாள் காலையில் அங்குள்ள சாலையில் அந்த உஷா நடந்து சென்ற போது அந்த வாலிபர் மீண்டும் அவரிடம் தன் காதலை கூறினார் .ஆனால் அப்போதும் அந்த பெண் அவரை திட்டியதால் அவர் கோபமுற்று தான் கொண்டு வந்த கத்தியால் அந்த உஷாவின் நெஞ்சிலும் ,கழுத்திலும் பலமுறை குத்தி கொலை செய்து விட்டு ஓடினார் .பின்னர் அவர் ஒரு இடத்தில விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .போலீசார் இருவரின் பிணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

Contact Us