“சரக்கடித்த சவுமியாவும் ,மது குடித்த மீராவும்…” -ஸ்டார் ஓட்டலில் நடந்த விபரீதம்

 

சென்னை தேனாம்பேட்டையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் 35வயதான சவுமியா கிண்டி கத்திப்பாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அருகில் ஆன்லைன் டிரேடிங் நடத்தி வரும் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த 32 வயதான மீரா என்பவர் செல்போனில் சத்தமாக பேசிகொண்டிருந்தார் .அதை கேட்டு கோபமான அந்த சௌமியா அந்த மீராவிடம் நாம் இருப்பது ஸ்டார் ஹோட்டல்,இப்படி சத்தமாக பேசுவது தனக்கு தொந்தரவாக இருப்பதாகவும் ,நிம்மதியாக தண்ணியடிக்கமுடியவில்லை என்றும் அதனால் மெதுவாக பேசுமாறு கூறினார்.

அதை கேட்டு கோபமான மீரா தான் இப்படித்தான் பேசுவேன் என்று கூறினார் .இதனால் கடுப்பான சௌமியா அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டார் .பின்னர் இருவரும் அந்த ஹோட்டலில் ஒருவரோடொருவர் கை கலப்பில் ஈடுபட்டதால் அந்த ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வந்து இருவரையும் சமாதானமாக போகுமாறு கூறினார் .ஆனால் அவர்கள் அதை காதில் வாங்காமல் சண்டை போட்டு கொண்டிருந்தனர் ,அதனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் போலீசுக்கு போன் செய்தனர் .போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இரு பெண்களையும் கைது செய்தனர் .ஏற்கனவே அந்த பெண் சௌமியா மீது ஒரு வழக்கு உள்ளதாக போலீசார் கூறினர்

Contact Us