“சிறுவர்களின் வாயில் பீடி வைத்து ,கட்டி வைத்து …”அடுத்து ஒரு பள்ளி வளாகத்தில் நடந்த கொடுமை

கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசுப் பள்ளியில் சனிக்கிழமை ஒரு கூட்டம் அங்கு விளையாடி கொண்டிருந்த 11 வயதான சிறுவர்களை கூப்பிட்டு ஒரு மரத்தில் கட்டி வைத்தது .பிறகு அவர்களின் வாயில் பீடி வைத்து பற்ற வைத்து கொடுமை செய்தனர்.அந்தக் கும்பல் குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் அந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர்

இந்த கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, தேவசந்திரா வார்டு முன்னாள் கார்ப்பரேட்டர் எஸ் ஸ்ரீகாந்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதனால் அவர் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை அணுகினார்.

அவரின் புகாரின் பேரில் போலீசார் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .பின்னர் தாங்களாகவே வழக்கு பதிந்து விவேக் (18) என்ற நபரையும், ஐந்து சிறார்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஒயிட்ஃபீல்ட் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் டி.தேவராஜ் , “18 வயது மெக்கானிக் உட்பட ஆறு உறுப்பினர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குறிப்பாக பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் அருகே ரோந்து பணியை அதிகப்படுத்துவோம்.”என்றார் .

Contact Us