“ரெண்டு பொண்டாட்டியையும் ஒரே மாதிரி …”ஒரு சைக்கோ கணவனிடம் சிக்கிய பெண்கள் .

 

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் ,இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு கர்னலின் மகன் நவ்னிந்தர்பிரீத்பால் என்ற 40 வயதான நபர் வசித்து வந்தார் .இவர் கடந்த 2018ம் ஆண்டில் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பிஷன்புரா கிராமத்தைச் சேர்ந்த சுக்தீப் கவுர் என்ற பெண்ணை மணந்தார். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .

இதனால் கடந்த செப்டம்பர் 19 நள்ளிரவில், அவர் கர்ப்பமாக இருந்தபோது அந்த நவ்னிந்தர்பிரீத்பால் நைட்ரஜன் வாயுவை சுவாசிக்க வைத்து அவரை கொன்று விட்டார் .பின்னர் நவ்னிந்தர்ப்ரீத் அவரின் மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று அவரின் பெற்றோரை நம்ப வைத்து ,அவர்களை சமாதானப்படுத்தினார், அதைத் தொடர்ந்து அந்த சுகதீப் தகனம் செய்யப்பட்டார் .

அதன் பிறகு அவர் பதிண்டாவைச் சேர்ந்த சுபிந்தர்பால் கவுர் என்ற 28 வயது பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து இரண்டு வாரங்களில் அவரை திருமணம் செய்யவிருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணையும் முதல் மனைவியை கொன்றதை போல கொல்ல திட்டமிட்டார்
அதனால் அந்த பெண் சுபிந்தர்பாலையும் ,அவரது முகத்தை பளபளப்பாக்கும் என்று பொய் சொல்லி சிலிண்டரிலிருந்து நைட்ரஜனை உள்ளிழுக்கச் சொன்னார். அவர் நைட்ரஜனை உள்ளிழுத்ததும் அவர் மரணமடைந்தார் . பின்னர் அந்த பெண்னின் பிணத்தை படுக்கைக்கு அடியில் குழி தோண்டி புதைத்தார்.பிறகு இந்த கொலைகள் பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து அவரை கைது செய்தனர்

Contact Us