உலகின் பெரும் ஆச்சர்யம்; கொரோனா பரவாத ஒரே ஒரு நாடு! எங்குள்ளது தெரியுமா?

 

உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கொரோனா தொற்றானது இங்கிலாந்தில் உள்ள தீவான Saint Helena Island இல் கொரோனா பாதிப்பு சிறிது ஏற்படவில்லை எனும் ஆச்சர்ய தகவலொன்று வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அருகில் ஒரு தீவு உள்ளது, அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் மக்கள் இப்போது இந்த தீவை பூஜ்ஜிய கொரோனா தொற்று கொண்ட தீவாக அங்கீகரிக்கின்றனர்.

nzherald.co.nz என்ற தளத்தில் வெளியான செய்தியின்படி, இந்த தீவின் பெயர் Saint Helena Island என்பதாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீவில், ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Saint Helena Island எனும் இந்த தீவு 121.7 கிமீ² பரப்பளவில் உள்ளதுடன் இந்த தீவின் மக்கள் தொகை சுமார் 5000 ஆகும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் Saint Helena Island இல் இன்னமும் கோவிட் நெறிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகின்றமை உலகிற்கு பெரும் ஆச்சர்யமான தகவலாக உள்ளது.

மேலும் இங்கு மக்கள் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனினும், வெளியில் இருந்து வருபவர்கள் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்களாம்.

Contact Us