கார் பூட் சேலில்(Car Boot Sale) வாங்கிய கல்: பல வருடம் கழித்து 2 மில்லியன் பவுண்டுகள் என்று கண்டு பிடிப்பு !

பிரித்தானியாவின் கம்பலான் பகுதியில் வசித்து வரும் 70 வயது மூதாட்டி, தன் வீட்டை துப்பரவு செய்துள்ளார். அப்போது அவர் தனது நகைப் பெட்டியை எடுத்து பார்த்து. அதில் உள்ள சில நகைகள் என்ன விலை வரும் என்று அறிய அவற்றை நகை கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் பெட்டிக்கு உள்ளே, ஒரு கல்லும் இருந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் கார் பூட் சேல் நடந்த வேளை அதனை வாங்கிய ஞாபகம் அவருக்கு வந்தது. வெறும் 28 அல்லது 30 பவுண்டுகளுக்கு தான் அதனை அவர் வாங்கி இருந்தார். அதனால் அந்தக் கல் பெறுமதியற்றது என நினைத்து, அதனை குப்பை தொட்டியில் எறியவும் எண்ணினார். ஆனால் இருப்பினும் அதனையும் காட்டி என்ன விலை போகும் என்று அறிந்து கொள்வோம் என நினைத்து, நகைகளோடு கல்லையும் எடுத்துச் சென்றார். கல்லைப் பரிசோதித்த நகை கடைக்காரர் தலை மேல் கையை வைத்தார்… காரணம் …

அது 34 கரட் அடர்த்தி கொண்ட அரிய வகை டயமன் கல். அதன் தற்போதைய விலை 2 மில்லியன் பவுண்டுகளை தாண்டும் என்று அவர் கூறியுள்ளார். தனது பென்ஷன் காசை எடுத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்த 70 வயது மூதாட்டிக்கு அடித்துள்ளது அதிஷ்டம். நவம்பர் மாதம் 30 திகதி இந்த கல்லை ஏலத்தில் விட உள்ளார்கள். முழு காசையும் மூதாட்டிக்கு கொடுக்கவும் உள்ளார்கள். கல்லின் பெறுமதியே தெரியாமல், கொண்டு வந்து போயும் போயும் கார் பூட் சேலில் விற்ற அந்த நபரை என்னவென்று சொல்வது ? பொதுவாக கார் பூட் சேல் நடக்கும் போது, வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொண்டு வந்து தான் வெள்ளை இனத்தவர்கள் விற்கிறார்கள். ஆனால் அவற்றில் பல, ஆயிரக் கணக்கில் பெறுமதியான பொருட்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை.

Contact Us