பிரான்ஸ் அம்பாசிடருக்கு சம்மன் அனுப்பிய பொறிஸ்: உடனே என்னை வந்து சந்தியுங்கள் என கட்டளை பிறப்பித்தார் !

பிரித்தானிய மீன் பிடி இழுவைக் கப்பல் இரண்டை, பிரான்ஸ் நாட்டு கடல்படையினர் பிரித்தானிய கடல் எல்லையில் வைத்தே மறித்து கப்பலை பிரான்சுக்குள் இழுத்துச் சென்றுள்ளார்கள். குறித்த 2 இழுவைக் கப்பலுக்கு உதவி செய்ய என சென்ற பிரித்தானிய கடல் படைக் கப்பலை, பிரான்ஸ் கடல் படை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பிரித்தானிய கடல்படை, அதி உச்ச உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து எழுந்த நெருக்கடியை அடுத்து, லண்டனில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதுவரை உடனடியாக, வெளிநாட்டு அமைச்சுக்கு வருமாறு பொறிஸ் ஜொன்சன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பிரான்ஸ் நாட்டு தூதுவர் இன்று வெள்ளி,

பிரித்தானிய அமைச்சரை சந்தித்து விளக்கம் தர உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us