அடுத்த பேப்பரிலும் நெற்றி அடி: கோட்டபாயவை எதிர்த்து புறப்பட இருக்கும் பெரும் பட்டாளம் தமிழர்கள் போர் கொடி …

ஸ்காட் லாந்தில் இருந்து வெளியாகும் மேலும் ஒரு பேப்பரில், கோட்டபாய தொடர்பாக பெரும் கட்டுரை ஒன்று புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. இது பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சொல்லப் போனால், கோட்டபாயவை எதிர்க்க பிரித்தானிய தமிழர்கள் தயாராகி வரும் நிலையில். பிரான்சில் இருந்து(லாச் செப்பல்) ஒரு மினி பஸ்சில் மேலும் பல நாட்டுப் பற்று மிக்க தமிழர்கள் ஸ்காட் லாந்து வர உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது போக ஜேர்மனி மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து, விமானம் மூலம், ஸ்காட் லாந்து வர பல தமிழர்கள் டிக்கெட்டுகள் போட்டும் வருகிறார்கள். தமிழர்கள் உணர்வுகளோடு விளையாடும் கோட்டபாயவை, முழு அளவில் எதிர்க்க தற்போது தமிழர்கள் தயாராகியுள்ள அதேவேளை. பிரித்தானியாவில் பிரிந்து நின்று செயல்பட்ட பல தமிழ அமைப்புகள்..

தற்போது ஒன்றாக களத்தில் இறங்கவுள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. எனவே பெரும் அளவிலான தமிழர்கள் அங்கே ஒன்று கூட உள்ள நிலையில். கோட்டபாயவை கைது செய்ய வேண்டும் என்று அண்ணன் வைக்கோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதப் படுகொலை நிகழ்த்திய கோட்டபாயவை கைது செய்யவேண்டும் என்று வைகோ அவர்கள், ஸ்காட் லாந்து அரசை கோரவுள்ளதாகவும். அதற்காக உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் அனுப்ப உள்ளதாகவும் அறியப்படுகிறது.

Contact Us