சீன DF-41 மலை! இந்திய அக்னி-5 மடு : ஆனால் வாய் பேச்சுக்கு மட்டும் ஒன்றும் குறைச்சலே இல்லை !

இந்தியா அக்கினி 5ஐ பரிசோதித்து விட்டது. இது சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தல்… அது இது என்று இந்திய பத்திரிகைகள் மட்டும் செய்தியை வெளியிட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சீனாவின் எப்பாகத்தையும் அணுக்குண்டுகளால் தாக்கக் கூடிய அக்னி௫ ஏவுகணைகளை 2021 ஒக்டோபர் 27-ம் திகதி இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது, என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது. அணுக்குண்டுகளால் போர் செய்யும் போது நீயும் தொலைந்தாய், நானும் தொலைந்தாய் என்ற நிலைதான். அதில் யார் அதிக அணுக்குண்டுகளை அதிக வேகத்தில் வீசுவார்கள் என்பதுதான் முக்கியம்.

சீனாவின் கிழக்குக் காற்று என்னும் பொருளுடைய DongFeng ஏவுகணைகள் நான்கு தலைமுறையாக உருவாக்கப்படுகின்றது அதன் நான்காம் தலைமுறை DongFeng-41 (DF-41) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாய்ச்சல் தூரத்தில் இது உலகின் இரண்டாவது வலிமை மிக்க ஏவுகணையாகும். அதன் பாய்ச்சல் தூரம் 12,000கிமீ முதல் 15,000கிமீ அக்னி-5இன் பாச்சல் துரத்திலும் இரண்டு மடங்கிலும் அதிகமானது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையான DF-41 இன் வேகம் ஒலியிலும் பார்க்க 25மடங்கு ஆகும்.

இது ஆறு முதல் பத்து வரையிலான அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று பல இலக்குகளைத் தாக்க வல்லது. இதன் ஹைப்பர்சோனிக் வேகத்தில் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கக் கூடிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகில் எந்த நாட்டிடமும் இல்லை. அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஒரு விண்வெளிப்படையை (Space Force) அமைத்தால் மட்டுமே சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இந்தியாவின் Centre for Strategy and Technologyயின் இயக்குனர் ராஜ்ராஜேஸ்வரி பிள்ளை ராஜகோபாலன் இந்தியாவைக் காப்பாற்றுவாரா? சீனா 2021 ஓகஸ்ட் மாதம் பரிசோதித்த உலகைச் சுற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் அமெரிக்கா என்னும் அம்மியே ஆடிப்போயுள்ள , நிலையில். யாருக்கப்பா பூச்சாண்டி காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை.

Contact Us