காய்கறி வாங்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் நகை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கண்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் தனியார் எலெக்ட்ரிக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் கீதா காய்கறிகள் வாங்குவதற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் வீதியில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 அடையாளம் தெரியாத இளைஞர்கள் திடீரென்று கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருக்கும் வீதிகளில் சிசிடிவி கேமரா ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறிகள் வாங்கச் சென்ற பெண்ணிடம் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us