நாங்க உதவ ரெடி… ஆப்கான் மக்களுக்கு ரூ.1,076 கோடி கொடுத்த அமெரிக்கா..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு இருந்த போது தாலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றினர். இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்து இருப்பதால் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறினர். ஆகவே அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ முடிவெடுத்துள்ளனர். அதனைப் போல அமெரிக்காவும் உதவ முன்வரவேண்டும் என்று தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்தபோது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரூ.1076.85 கோடி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியூறவு துறை அமைச்சர் டோனி பிளிங்கன் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த உதவியை அறிவித்து இருக்கிறோம் என்றும், இந்த உதவியை நாங்கள் நேரடியாக சென்று கொடுப்பதில்லை என்று கூறினார். சர்வதேச சேவை அமைப்பான ஐநா சபையின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு, யுனிசெப், சர்வதேச குடிப்பெயர் மக்கள் நல அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும்.

Contact Us