அதிபரின் பெண் உதவியாளரை…. முத்தமிட்ட எம். பி …. பரபரப்பில் அமெரிக்கா….!!

அமெரிக்காவில் எம்.பி. ஒருவர் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளரை முத்தமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் 2001-09 வரை செனட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது அவரது உதவியாளர் ஹுமா ஆபிதீன் (வயது 45) ஆவார். இவர் வாஷிங்டனில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பின்னர் செனட் எம்.பி.யான ஒருவருடன் ஒன்றாக வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து அந்த எம்.பியின் வீட்டை அடைந்ததும் ஹூமாவை இவர் “வீட்டிற்கு வந்து காபி குடித்துவிட்டு கிளம்புங்கள்” என்று அழைத்துள்ளார். இவரும் அழைப்பை ஏற்று அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறிதும் எதிர்பாராத வகையில் ஹூமாவுக்கு எம்.பி முத்தம் கொடுத்துள்ளார். தற்போது ஹூமா இந்த நினைவை பகிர்ந்துள்ளார். ஹூமா, “நான் மிகவும் அதிர்ச்சியாகி அவரை தள்ளிவிட்டேன். அந்த கடைசி 10 வினாடிகள் என் வாழ்வில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்பதே எனக்கு விருப்பம்” என்று கூறினார்.

Contact Us