தீவிரவாத அமைப்பு நடத்திய போராட்டம்…. பலியாகிய காவல்துறையினர்…. பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்….!!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில் ஒன்று Tehreek-e-Labbaik. இந்த அமைப்பின் சார்பாக லாகூரில் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதனை அடுத்து அந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கி போன்ற பல ஆயுதங்களை வைத்திருந்த போராட்டாக்காரர்கள் காவல்துறையினர் நோக்கி சுட்டுள்ளனர்.

மேலும் கற்களை வீசி, தடியடி நடத்தியதில் காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் ஷேக்ப்பூரா பகுதி முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படுகாயமடைந்த 40 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்வதை ஒரு காலமும் அரசு அனுமதிக்காது என்றும் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்

Contact Us