“சேலை மாத்தும்போது வேலைய காமிச்சிட்டியே” -ஆயுர்வேத டாக்டரிடம் சிக்கிய பெண்.

குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கோடினார் பகுதியில் 25 வயதான திருமணமான பெண்ணொருவர் உடல்நிலை சரியில்லாததால் ,அங்குள்ள ஹரி சோலங்கி என்ற ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றார் .அப்போது அந்த ஆயுர்வேத மருத்துவர் அந்த பெண்ணை சோதனை செய்து பார்த்தார் .அப்போது அந்த பெண்ணின் உடலில் தீய ஆவி புகுந்திருப்பதாக கூறி அதற்கு சில சடங்குகளும் ,மந்திரங்களும் செய்ய வேண்டுமென்றார் .

அதனால் அந்த பெண்ணை அவரின் திருமண சேலையை அணிந்து வர சொன்னார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் தன்னுடைய மாமியாருடன் அவரின் திருமண சேலையை அணிந்து கொண்டு அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் வந்தார் .அப்போது அந்த நபர் அவரின் மாமியாரை வெளியே நிற்க வைத்தார் .பின்னர் அந்த பெண்ணை மட்டும் அறைக்குள் கூப்பிட்டு அவருக்கு சில மருந்துகளை கொடுத்தார் . .பின்னர் அந்த பெண்ணை வைத்து பூஜைகள் செய்தார் .பூஜை முடிந்து அந்த பெண் தனது சேலையை மாற்றிக் கொண்டிருந்த போது, ​​மருத்துவர் ஹரி சோலங்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு மயக்கம் தெளிந்து பார்த்து தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த பெண் இது பற்றி தன்னுடைய கணவரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ந்த அந்த கணவர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அந்த ஆயர்வேத மருத்துவர் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர்

Contact Us