“ஆஸ்திரேலியாவில் குறைந்த கொரோனா தொற்று!”.. கட்டுப்பாடுகளில் தளர்வுகள்..!!

 

ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆஸ்திரேலிய மக்கள் பிற நாடுகளுக்கு செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கான்பெர்ரா நகரத்தை சேர்ந்த மக்கள், கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால், மக்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Contact Us