கிளப்பில் நடந்த மோதல்…. குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…. கைப்பற்றப்பட்ட முக்கிய ஆயுதங்கள்….!!

 

பனாமா நாட்டில் எஸ்பேசியா பனாமா என்ற இடத்தில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் இரண்டு குழுவினரிடையே இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் இந்த தாக்குதலில் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக கார் மற்றும் தாக்குதல் நடத்திய ஆயுதங்களை போலீசார் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

Contact Us