இன்ஸ்டாகிரம் அழகிக்கு வலைவீச்சு…. கடத்தல் கும்பலின் பின்னணி….? பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்…..!!

 

பிரேசில் நாட்டை சேர்ந்த பிட்னஸ் மொடலான Jennifer Rovero என்ற இளம்பெண்ணை இன்ஸ்டாகிரமில் 17,200 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், உண்மையில் Jennifer ஒரு போதைப்பொருள் மற்றும் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வரும் பணத்தில்தான் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, Jennifer உடன் தொடர்புடைய போதை கும்பலில் 21 பேர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, அவர்களில் 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டில் அந்நாட்டில் நடந்த பல கொலைகளுக்கும் Jennifer-இன் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, Jennifer தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த கார்களில் ஆடம்பரமான இடங்களுக்கு செல்வதையும், டிசைனர் உடைகளை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதையும் வழக்கம். மேலும், Jennifer போதை, கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களால் வருகின்ற பணத்தை தான் செலவு செய்வதாகவும் போலீசார் கருதுகின்றனர். எனவே Jennifer-ஐ தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Contact Us