பிரான்ஸ் அதிபரை அடிக்க வேண்டாம்: பொறிஸ் கைகளை இழுத்துப் பிடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடர்

தற்போது G20 உச்சி மாநாடு இத்தாலில் நடைபெற்று வருகிறது. இதில் இதில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பிரான்ஸ் அரசு தலைவர் மைக்கிரான் மீது பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கடும் கோபத்தில் உள்ளார். இதனால் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, மேடையில் பிரான்ஸ் அதிபர் நின்றிருந்தவேளை, அதே மேடைக்கு பொறிஸ் ஜோன்சனும் அவசரமாக படி ஏறி சென்று கொண்டு இருந்தார். அவர் செல்லும் வேகத்தை பார்த்த, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பொறிஸ் ஜோன்சனின் கைகளை பிடித்து மெதுவாக செல்லுமாறும். மேடையில் உள்ள பிரான்ஸ் அதிபரை ஒன்று செய்யவேண்டாம் என்று கூறி நக்கல் அடித்துள்ளார். ஏற்கனவே மேடையில் நின்றிருந்த ..

ஜோ பைடன் முதல் கொண்டு அனைவரும் சிரித்து விட்டார்கள். மிகவும் குழந்தை தனமாக, மற்றும் அப்பாவி போலா சகஜமாக பழகும் கனேடியப் பிரதமர் அடித்த நக்கலை எவருமே கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை. அனைவரது முகத்திலும் சிரிப்பை வரவளைத்தார், ஜஸ்டின் ரூடர் என்பது தான் உண்மை.

Contact Us