நீல கலர் கோட்- சூட்டோடு கிளாஸ்கோ நகர் ஹோட்டலில் தங்கியுள்ள கோட்டபாய ராஜபக்ஷ ! திங்கள் நடக்கவுள்ள பூசை ? ?

இன்று(30) சனிக்கிழமை, ஏர் லங்கா விமானம் மூலம் பிரிட்டன் வந்த கோட்டபாய, கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவரை மாநாடு சார்பாக சில முக்கிய ஏற்பாட்டாளர்கள் சந்தித்து. அவர் எங்கே தங்கப் போகிறார் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் தனது ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மதியம் 12.40 மணிக்கு கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த கோட்டபாயவை, முதலில் வரவேற்றது, பிரித்தானியாவுக்கான தூதுவர் சரோஜா சிறிசேன.

ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, இன்று(31) தொடக்கம் நவம்பர் 12 வரை, கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இருப்பினும் நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் முக்கிய மாநாடு நடக்கவுள்ளது. நீலக் கலரில் கோட் சூட் போட்டுக் கொண்டு, வந்த கோட்டபாய ராஜபக்ஷ சற்றே பரபரப்பாக காணப்பட்டதாக, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதோடு. குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கோட்டபாய, அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்ற ஏக்கத்தில் உள்ளது போல இருக்கிறது.

திங்கள் தமிழர்களு அங்கே ஒன்றுகூடவுள்ள நிலையில், பூசை மிகவும் விமர்சையாகவும் இம் முறை போராட்டம் ஒரு புது முறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். அதனை அதிர்வு இணையம் நேரலை செய்யவும் உள்ளது. எனவே எமது செய்தியோடு இணைந்திருங்கள் தமிழீழ உணர்ச்சி மிக்க… வாசகர்களே…

Contact Us