லண்டனில் இலங்கையரான ரஞ்சித்தை கொடூரமாக கொன்ற சூத்திரதாரி கைது!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Ranjith Kankanamalage(50) என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets கல்லறை பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் நிச்சயமாக இது ஒரு கொலை தான் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயங்கர கொலை சம்பத்தால் LGBT+ சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், (அக்டோபர் 27) இந்த கொலை சம்பவம் தொடர்பாக 41 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலைக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 36 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டக்காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து எந்த ஒரு தகவலும், விபரமும் வெளியாகவில்லை. அவர்கள் தான் என்பது உறுதியானால், கொலையாளி தொடர்பான முழு விபரமும், இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது என்பதும் தெரியவந்துவிடும்.

Contact Us