இளைஞர் பாஸ்போர்ட் வைத்திருந்தும்…. ஏன் குடிமகன் அல்ல….? பிரபல நாட்டு நீதிபதிகளின் தீர்ப்பு….!!

பிரெஞ்சு குடியரசை சேர்ந்த பெண் சுவிட்சர்லாந்து ஆண் ஒருவரை திருமணம் செய்ததின் மூலம் அவர் சுவிஸ் குடியுரிமை பெற்றார். இதன் பிறகு தனது முதல் கணவரை பிரிந்த அந்த பெண், லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை 2 ஆவதாக திருமண செய்தார். இதனை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் உள்ள Winterthur-இல், பிரெஞ்சு பெண்ணுக்கும், லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்த வாரிசை சுவிஸ் பெடரல் நீதிமன்றம் தற்போது சுவிஸ் குடிமகன் அல்ல என்று கூறியது.

மேலும் 22 வயது இளைஞரான இவர் சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த வழக்கில், சூரிச் அதிகாரிகள் இவருக்கு தவறுதலாக பாஸ்போர்ட் வழங்கியதாக பெடரல் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதுமட்டுமின்றி, விதிகளின்படி இவர் சுவிஸ் பாஸ்போர்ட் பெற தகுதியற்றவர் என்பதை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயலும்போதுதான் கன்டறிந்தனர்.

அதன்படி, சுவிஸ் மாகாணத்தை சேர்ந்த குடிமகன், fast-tracked citizenship என்ற நடைமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விதி உள்ளது. இந்த நபர் இராணுவ வரி கட்டணம் செலுத்தாததால் கடன் இருப்பதாக அதிகாரிகள் கருதினர். இது குறித்து அவர் கூறுகையில், தான் சுவிஸ் குடிமகன் இல்லை எனில் இராணுவ வரி செலுத்த தேவையில்லை என்றும் எனக்கு கடன் இல்லை என்றும் வாதித்தார். ஆனாலும், பாஸ்போர்ட் பெற தகுதியற்றவர் என்று கூறிய நீதிபதிகள், அவரது நீதிமன்ற கட்டணத்தை மட்டும் தள்ளுபடி செய்தனர்.

Contact Us