துப்பாக்கிச் சூடில் கொல்லப்பட்டவர்: அடையாளம் கண்ட ரொறன்ரோ பொலிசார்

ஸ்கார்பரோவில் கென்னடி மற்றும் எல்லெஸ்மியர் சாலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை கென்னடி மற்றும் எல்லெஸ்மியர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் சுமார் 4.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை மீட்டுள்ளனர். இதனையடுத்து அவசர மருத்துவ உதவிக்குழுவினரின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் காயங்கள் காரணமாக குறித்த நபர் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார், மரணமடைந்தவர் ரொறன்ரோ பகுதியில் குடியிருக்கும் டக்ளஸ் டெவ்லின் எனவும் அவருக்கு 54 வயது என்றும்,

கொள்ளை சம்பவத்தினிடையே அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், துப்பாக்கி குண்டு காயங்களுடன் அவர் தெருவின் குறுக்கே பெட்ரோல் நிலையத்திற்கு தடுமாறி சென்றதாகவும், அங்கு அவர் தடுமாறி சரிந்ததாகவும் கூறப்படுகிறது.

Contact Us