கனேடிய மாகாணம் ஒன்றை மொத்தமாக உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்: வெளியான தரவுகள்

அதிக போதை மருந்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்பர்ட்டா முழுமையும் நாளுக்கு 4 பேர்கள் அதிக போதை மருந்தால் மரணமடைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி 2020 மே மாதத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஆல்பர்ட்டா மக்களில் சுமார் 100 பேர்கள் அதிக போதை மருந்து காரணமாக மரணமடைந்துள்ளனர்.

30 வயது கடந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதும், இதில் ஆண்களே அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. மாகாண நிர்வாகம் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும், சிகிச்சை தொடர்பில் 4000 சிறப்பு இடங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us