“பெத்தவனோட மத்தவன்தான் முக்கியமா ?-“காதல் திருமணம் செய்த தம்பதிக்கு பெற்றோரால் நேர்ந்த கதி

உத்தரகண்டின் நைனிடால் மாவட்டத்தில் கத்கோடம் பகுதியில் வசிக்கும் 21 வயதான கைனத், என்ற பெண்,தன் தந்தை சலீம் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் சல்மான் என்ற 24 வயதான வாலிபருடன் காதல் கொண்டார் .அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் தந்தை சலீம் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் .அதனால் அவர்கள் அந்த பெண் கைனத்திடம் அந்த காதலை மறந்து விட்டு தாங்கள் பார்க்கும் மணமகனை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொன்னார்கள் .ஆனால் அந்த பெண் பிடிவாதமாக அந்த சல்மான்தான் தனக்கு கணவராக வரவேண்டும் என்று கூறினார்.

அதனால் அந்த பெண் தன்னுடைய காதலன் சல்மானை , இரண்டு மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டார் . இந்த திருமண விஷயம் கேள்விப்பட்டதும் அந்த தந்தையும் அவரின் மகனும் கடும் கோபத்தில் இருந்தனர் .பின்னர் கோபத்தில் இருந்த பெண்ணின் தந்தை சலீம் ஒரு கத்தியை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு, தன் மகனுடன் மகளின் வீட்டுக்குள் சென்றார். பிறகு வீட்டிலிருந்த தன் மகளையும், மருமகனையும் கத்தியால் குத்தினார். இதில், அவரது மகள் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரின் மருமகன் சல்மானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மகளை கொலை செய்த தந்தை சலீமை போலீசார் கொலை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Contact Us