“நம்ம அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவேன்” -மிரட்டிய காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடுமை

குஜராத்தின் காந்திநகரில் ஒரு 23 வயதான பெண்ணொருவர் அங்குள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்தார் .அந்த வாலிபரும் அந்த பெண்ணை காதலித்தார் .இருவரும் தங்களின் காதலை ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் ,இன்ஸ்டாக்ராம் மூலம் அரட்டையடித்து வளர்த்தனர் .அப்போது இருவரும் அந்தரங்கமாகவும் ,ஆபாசமாகவும் பேசி அரட்டையடித்தும் போட்டோக்கள் எடுத்தும் அதை பகிர்ந்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது .அப்போது அந்த பெண் அவருடனிருந்த காதலை முறித்து கொண்டார் .ஆனால் அந்த காதலன் அந்த காதலை தொடர நினைத்தார் .இதனால் அந்த காதலன் அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்தார் .அதன் படி அவர்கள் காதலிக்கும் போது அந்த பெண்ணோடு பேசிய அந்தரங்க சாட் மற்றும் போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த பெண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணின் டைரி மற்றும் போனை ஆராய்ந்த போது இந்த காதலனின் மிரட்டல் விஷயம் தெரிய வந்தது .
அதனால் அந்த பெண்ணின் தந்தை அந்த காதலன் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை கைது செய்ய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Contact Us