மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சில்மிஷம் செய்த கான்ஸ்டபிள் கைது!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாழடைந்த இடத்துக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படும் அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அத்தனகல்ல பதில் நீதவான் சமித்த லால் கொடிசிங்க, இன்று (31) பிற்பகல் உத்தரவிட்டார்.

மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பஸ்யாலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாழடைந்த இடத்துக்கு  அழைத்துச் சென்ற அவர், குறித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பதில் நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Contact Us