ஓடும் ரயிலில்…. வாலிபர் செய்த கொடூரம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

 

ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ உள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் வழக்கம்போல் ஓடிக்கொண்டிருந்த ரயில் ஒன்றில் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகளை கண்மூடித்தனமாக கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி துப்பாக்கியை கொண்டும் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகளை சுடுவதற்கு முயன்றுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தன்னுடன் பயணம் செய்த பயணிகளை கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கிய 20 வயதுடைய வாலிபரை கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us