” டான்ஸ் போடுங்க ,நான் பாஸ் போடுறேன்” -மாணவிகளுடன் ஒரு ஹெட் மாஸ்டரின் காம லீலை

 

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மாணவிகள் படிக்கும் ஒரு நடுநிலை பள்ளி உள்ளது .இந்த பள்ளியில் பல மாணவிகள் எட்டாம் வகுப்பில் படித்து வருகின்றனர் .அந்த பள்ளியில் உள்ள ஹெட் மாஸ்டருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது .இதனால் அடிக்கடி குடித்து விட்டு பள்ளிக்கூடம் வருவார் .அதனால் அவர் மீது அந்த பள்ளியிலிருந்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் சென்று வண்னமிருந்துள்ளது .
இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஹெட்மாஸ்டர் தன்னிடம் எட்டாம் வகுப்பில் படிக்கும் சில மாணவிகளை தன்னுடைய ரூமிற்கு அழைத்தார் .அப்போது அவர் குடிபோதையில் இருந்தார் .பின்னர் அவரின் ரூமிற்குள் வந்த மாணவிகளிடம் தன்னோடு டான்ஸ் போடும்படி கட்டாயப்படுத்தினார் .அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகளிடம் இப்படி டான்ஸ் போட்டால் அவர்களை பாஸ் போடுவதாக ஆசை காமித்தார் .அதனால் சில மாணவிகள் அவரோடு பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள் .அந்த காட்சியை அந்த ஹெட்மாஸ்டர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்
அதன் பிறகு அந்த மாணவிகள் இந்த விஷயத்தை தங்களின் பெற்றோரிடம் கூறினர் .அதை கேட்டு அதிர்ச்சியான மாணவிகளின் பெற்றோர் இது பற்றி அங்கிருக்கும் பொலிஸ் ஸ்டேஷனிலும் ,மாவட்ட அதிகாரியிடமும் புகார் கூறினர் .அந்த புகாரின் பேரில் அந்த ஹெட்மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்த தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தார்

Contact Us