“டேய் தகப்பா ,கண்ட பொண்ணோட கார்ல சுத்தரியே”-மகளால் ஒரு தந்தைக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்

 

ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள ஹனுமான் நகரில் உள்ள குசல்வாரா சாலையில் வசிக்கும் 50 வயதான நபருக்கு திருமணமாகி இரண்டு டீனேஜ் மகள்கள் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .இதனால் அந்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வராமல் அந்த பெண்ணோடு ஊர் சுற்றி உல்லாசமாக இருந்தார் .இதனால் அந்த குடும்பத்தில் அமைதி பறிபோணது .அதன் காரணமாக அந்த இரண்டு டீனேஜ் பெண்களும் தங்களின் தந்தையை திருத்த முடிவு செய்தனர் .
அதனால் கடந்த வாரம் ஒரு நாள் தஙகளின் தந்தை அந்த கள்ள உறவு பெண்ணோடு காரில் போவதை பார்த்தனர் .அப்போது இருவரும் அந்த காரை நடுரோட்டில் நிறுத்த முயற்சித்தனர் .அப்போது தன்னுடைய மகளை கண்ட அந்த தந்தை காரை நிறுத்தாமல் வேகமாக போய் விட்டார் .அதன் பின்னர் அந்த பெண்கள் அந்த ஊர் மக்கள் உதவியோடு அந்த காரை ஒரு இடத்தில நிறுத்தினர் .அப்போது தங்களின் தந்தை ஒரு பெண்ணோடு அந்த காரில் இருப்பதை பார்த்து கோபப்பட்டு அந்த தந்தையை அடித்து துவைத்தனர் .அப்போது அவர்கள் அவரிடம் இரு மகள்கள் இருக்கும் போது இப்படி கண்ட பெண்ணோடு ஊர் சுத்தரியே என்று திட்டிவாறே தாக்கினர் .அதன் பிறகு அந்தக்காதலியையும் திட்டி அங்கிருந்து துரத்தி விட்டனர் . .இந்த சம்பவம் அந்த சாலையில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது .இரு மகள்கள் தந்தையை அடிக்கும் இந்த வீடியோ காட்சி ஊடகத்தில் வெளியாகியுள்ளது

Contact Us