“அவனோட படுத்தாலும் பரவாயில்லை ,அடுத்த மாப்பிளைய பார்க்கலாம்” .-காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் வசிக்கும் ஒரு பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு தலித் வாலிபரை காதலித்தார் .அந்த பெண் ஒரு கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே அந்த வாலிபரை காதலித்து வந்ததால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர் . அந்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை .மேலும் அவர்களின் காதலை ஏற்காததால் அந்த பெண் இது பற்றி தன்னுடைய காதலனிடம் கூரினார் .
அதன் பிறகு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் .பின்னர் இருவரும் ஒரு வீடு எடுத்து அங்கு வாழ்ந்து வந்தனர் ,இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஒரு நாள் அந்த பெண்ணையம் அவரின் தலித் கணவரையும் கூட்டி வந்து அங்குள்ள ஆற்றில் குளிக்க வைத்து அவர்கள் முடியை மழித்து விட்டனர் .அதன் பிறகு அந்த பெண்ணை மட்டும் தங்களின் வீட்டுக்கு கூட்டி வந்து அவருக்கு அவர்கள் சாதியை சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர் .மேலும் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இதனால், காவல் துறையினரிடம் பாதுகாப்பு கோரினார்.இதனால் கோபமுற்ற அந்த பெண் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர்.

Contact Us