பெண்களை அடிமையாக்கும் நீரூப்.. பிக்பாஸில் வெளியேற தயாரான அக்ஷரா வீடியோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. சென்ற வாரம் இசைவாணி தன்னிடம் உள்ள நெருப்பு நாணயத்தை வைத்து கிச்சன் ஏரியாவை கையில் எடுத்தார்.

அதேபோல் இந்த வாரம் நிலம் நாணயத்தை வைத்திருக்கும் நிரூப்பிற்கு லிவிங் ஏரியா சொந்தமாகி உள்ளது. இதற்காக பிக் பாஸ் நிரூப்பிற்கு ஒரு சலுகையை கொடுக்கிறார். அதாவது நிரூப் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களில் ஒருவரை தனக்கு உதவியாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.

இதற்காகவே காத்திருந்த நிரூப், அக்ஷராவை தனக்கு உதவியாளராக அழைக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் கமல் முன்னிலையில் சண்டையிட்டதை நாம் பார்த்தோம். இதனால் அக்ஷரா தன்னால் முடியாது என்று கூறுகிறார்.

மேலும் வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு செல்கிறேன் பிக் பாஸ் என்று சொல்கிறார். உடனே நிரூப் இதைத்தான் நான் முன்னாடியே சொன்னேன் வெளில அனுப்புங்கள் என்று பதில் கூறுகிறார். இவர்களின் சண்டையை பார்த்த ராஜு தீபாவளிக்கு பிரச்சனை இருக்கு என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்.

இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது ஒரு கூட்டணியாக இருக்கும் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் அக்ஷராவுக்கு எதிராக செயல்படுவது போல் தெரிகிறது. மேலும் பிரியங்கா நிரூப்பை பின்னால் இருந்து இயக்குவது அப்பட்டமாக தெரிகிறது.

இவர்களுடன் போராட முடியாத அக்ஷரா வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கடந்த சில நாட்களாக சொல்லி வருகிறார். இதற்கு முந்தைய சீசனில் கூட பரணி போட்டியாளர்களால் வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல் அக்ஷராவும் விரைவில் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கமெண்ட் கூறுகின்றனர்.

https://youtu.be/s_ovDSk0xoM

Contact Us