BTF ரூட் ரவி கோட்டபாய பக்கம் சாய்ந்தாரா ? போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒளிந்தார்களே ஏன் ?

நேற்றைய தினம்(01) ஸ்காட் லாந்து தேசத்தில் நடைபெற்ற, மாபெரும் போராட்டத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இதேவேளை TCC, நாடு கடந்த அரசின் அங்கத்தவர்கள், மேலும் சொல்லப் போனால் வரலாற்று மைய உறுப்பினர்கள் என்று பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புகள், இதில் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டது. ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பு(BTF) மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. இது போக BTF அமைப்பின் நிர்வாகி, ரூட் ரவியின் சகலை நடத்தும் GTF அமைப்பு உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளவில்லை. GTF அமைப்பில் எவரும் இல்லை என்பது ஊர் அறிந்த விடையம். அதில் 2 அங்கத்தவர்கள் இருக்கிறார்களா ? என்று கூட தெரியாது. ஆனால் இளையோர்களை உள்வாங்குவதாக கூறிக் கொண்டு, செயல்பட்டு வரும் BTF அமைப்பினர்,  ஏன் இந்த கோட்டபாய எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை ?

இவர்கள் முன்னரும் தேசிய கொடி ஏற்றக் கூடாது என்ற சர்சையில் சிக்கியவர்கள். தமிழர்கள் படிப்படியாக இந்த BTF அமைப்பை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் இவர்கள் தற்போது இளையோர்களை அமைப்பில் சேர்த்து, அதனூடாக அவர்கள் பெற்றோர்,  உறவினர்களையும், தம் பக்கம் இழுப்பதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை BTF அமைப்பு கோட்டபாய பக்கம் சாய்ந்து விட்டதா ? என்ற கேள்விகளும் எழுகிறது. BTF அமைப்பு இந்தப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தபோது. தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அதன், அங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரத்தை, எமக்கு ஏற்பாட்டாளர்கள் காட்டியும் உள்ளார்கள்.

போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே வருவோம் ….என்று சொல்வது கேலிக் கூத்தான விடையம். இது ஒன்றும் திருமண விழாவோ இல்லை புப்புனித நீராட்டு விழாவோ அல்லவே. போராட்டம் என்றால் மக்கள் தாமாகவே ஒன்று கூடுகிறார்கள். ஆனால் தமிழர்களின் விடுதலைக்காக பாடுபடுகிறோம் என்று கூறி வரும் BTF அமைப்பு எப்படி இந்தப் போராட்டத்தை புறக்கணித்தது ? இதற்கான சரியான விளக்கத்தை அவர்கள் முன் வைக்க வேண்டும். இது தொடர்பாக நாம் அவர்களிடம் பேச முற்பட்ட போதும். எவரும் அழைப்பை ஏற்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us