‘எங்கள் முழு ஆதரவு இவர்களுக்கு தான்’…. ஜி-20 உச்சி மாநாடு நிறைவு…. வெளியிடப்பட்ட அறிக்கை முடிவு….!!

 

இத்தாலி தலைநகரான ரோமில் கடந்த அக்டோபர் 30, 31 ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடந்தது. இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் ” FADF என்னும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழுவிற்கு ஆதரவு அளிப்பது முதன்மையான விஷயமாகும். இந்த அமைப்பானது பயங்கரவாத அமைப்பிற்கு அளிக்கப்படும் பண பரிமாற்றத்தை தடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

இதனை அடுத்து நிதிமோசடி, பயங்கரவாத அமைப்பிற்கு பண பரிமாற்றத்தை தடுத்தல், அதனை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நிதி சந்தைகள், நிலையான மீட்சியை உறுதி செய்தல் மற்றும் உலக நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை பேணுதல் ஆகியவற்றில் நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது மட்டுமின்றி ஆன்லைனில் நடைபெறும் வன்முறை, குற்றங்கள் மற்றும் வன்மையான பேச்சு போன்றவைகளுக்கு எதிராக இணைய பாதுகாப்பை மேம்படுத்தலாம்.

இதன் மூலம் டிஜிட்டல் சூழலில் நம்பிக்கையைப் பெற முடியும். இதேபோன்று ஊழலை எதிர்த்துப் போராடவும் உறுதியேற்றுள்ளனர். அதிலும் உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் ஊழல் செய்பவர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு புகலிடத்தை வழங்க மறுப்பது, நாடு கடந்த ஊழலை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. குறிப்பாக பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் சர்வதேச நிதி கண்காணிப்பு குழுவானது அதனை இன்னும் சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது. அதிலும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழுவிற்கு ஜி-20 நாடுகள் ஆதரவு அளிப்பது பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Contact Us