ஜூலை மாதத்தில் இருந்து…. 93 லட்சம் கணக்குகள் முடக்கம்…. வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை….!!

 

இந்தியாவில் ஜூலை மாதத்தில் இருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கியது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் “கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரிபோர்ட் வசதியை பயன்படுத்தி பயனர்கள் கொடுத்த எதிர்மறை கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. ஆகவே மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி 50 லட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் புகார்கள் பெற்றது மற்றும அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us