பிரபல நாட்டு இராணுவத்தில் தொடரும் அட்டூழியம்…. ‘நான் செய்து முடிப்பேன்’…. புதிய பாதுகாப்பு அமைச்சர் சபதம்….!!

 

கனடாவில் கடந்த அக்டோபர் 26 அன்று அனிதா ஆனந்த் என்ற பெண்மணி புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். மேலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan-க்கு பதிலாக இவர் பதவி ஏற்றார். ஏனெனில், முன்னாள் பாதுகாப்பு படை தலைவர் Jonathan Vance-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் முறைகேடில் ஈடுபட்டதால் Harjit பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து கனட ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2016 முதல் கனேடிய இராணுவத்தில் 700-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், அனிதா ஆனந்த் தனது டுவிட்டர் பதிவில், கனடாவின் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்கிறார்கள், தேவைப்படும்போது அவர்களுக்கான ஆதரவையும், நீதியையும் உறுதிப்படுத்துவதே எனது முன்னுரிமை.

மேலும் இராணுவத்தில் தவறான நடத்தை ஏற்பட்டால் அது பெண்ணுக்கு மட்டும் பிரச்சனை அல்ல. எனவே, இராணுவம் திறம்பட செயலாற்றவும், உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணரவும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியை நான் உறுதியாக சரிசெய்து காட்டுவேன்” என பேட்டி அளித்தார்.

இதனை தொடர்ந்து அனிதா ஆனந்த் பதவியேற்ற பின் தனது ட்விட்டர் பதிவில், “கனேடிய இராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலில் பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

Contact Us