தனது மகளை காதலித்த ஆமிக்காரனை சுட்டு கொல்ல முற்பட்ட அப்பா பலி!! ஆமியின் தாய் உட்பட இருவர் படுகாயம்!!

மகளின் காதலான இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த நபர் அதே இராணுவ சிப்பாயின் தாக்குதலில் பரியான நிலையில், இராணுவ சிப்பாயின் தாய் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் காலி – ஊருகஸ்மங்சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறியுள்ளனர். மகளின் காதலனான இராணுவ சிப்பாயின் வீட்டுக்கு தனது நண்பருடன் சென்றிருந்த தந்தை இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனினும் இராணுவ சிப்பாயின் தாயார் மீது துப்பாக்கி சூடுபட்டு அவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த சிப்பாய் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உயிரிழந்துள்ளதுடன்,

அவருடன் வந்திருந்த நண்பர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் 51 வயதான நபரே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாயின் தாயாரும், உயிரிழந்த நபரின் நண்பரும் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Contact Us