லண்டனில் குத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இலங்கைத் தமிழனா??

லண்டனில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த கொலை! இறந்து கிடந்த நபர் யார் என்ற விபரம் வெளியானதுபிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்த நபரின் புகைப்படம் முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Ilford-ல் உள்ள Harrow சாலையில் கடந்த 28-ஆம் திகதி நடந்த கொடூரமான கத்திகுத்து தாக்குதலில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

லண்டன் இல்பேஃட் பகுதி என்பதனால், இவர் தமிழராக இருக்க கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது. குறித்த சம்பவத்தை பொலிசார் வந்த பின்னர், அம்பூலன்ஸ் அங்கே நின்றவேளை ஒரு தமிழர் வீடியோவாக எடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பில் போட்டதால். இது தமிழராக இருக்க கூடும் என்று பலர் நம்பி இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த இளைஞனின் பெயர் Kamran Khalid என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று அதிகாலை 3.54 மணியளவில் Kamran Khalid, சண்டை காரணமாக அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்த பொலிசார் இளைஞனை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால், Kamran Khalid சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்15 வயது மதிக்கத்தக்க சிறுவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  என்பது மிகவும் அதிர்ச்சியான விடையம்.

Contact Us