பச்ச மிளகாய், பாகற்காய் சாப்பிட வைத்த நிரூப்.. வசமாக சிக்கிய பவானி ரெட்டி வீடியோ

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஒரு ஆளுன்னு கணக்கெடுத்து அவர்களை மட்டும் ப்ரோமோல காட்டுவாங்க போல. போன வாரம் முழுவதும் தாமரைச் செல்வியை ப்ரோமோல காட்டுனது போல இந்த வாரம் நிரூப்பை காட்டுறாங்க.

நிலம் காயினை கையில் வைத்திருக்கும் நிரூப்போட்டியாளர்களை கண்ட்ரோல் செய்கிறார். அதாவது பெட்ரூமில் மேக்கப் செய்து கொண்டிருக்கும் பெண் போட்டியாளர்களை சீக்கிரம் வெளியேறுமாறு சொல்கிறார்.

இப்படி தாமதமானால் பனிஷ்மென்ட் தருவேன் என்றும் சொல்கிறார். அதனால் அவசரமாக எல்லோரும் தயாராகிறார்கள். இறுதியில் ஒன்று, இரண்டு, மூன்று என்று கவுண்டவுன் செய்கிறார் நிரூப்.

இறுதியாக பெண்கள் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உள்ளனர். அவர்களுக்கு நிரூப்பச்சை மிளகாய், பாகற்காய், பூண்டு ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்ற தண்டனையை கொடுக்கிறார்.

மேலும் தயங்கும் பெண்களை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார். பவானி, சுருதி போன்றோர் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சாப்பிடுகின்றனர். அக்ஷராவையும் சாப்பிட வைக்க வேண்டும் என்று நிரூப்வில்லத்தனமாக கூறுவதுடன் ப்ரோமோ முடிகிறது.

இந்த சீசனில் மட்டும் தான் ஹீரோவும் இல்லாமல், காதலும் இல்லாமல் அத்தனை பேரும் வில்லனாகவே இருக்கிறார்கள். பிக்பாஸ் தரும் டாஸ்க்கை விட நிரூப் தரும் டாஸ்க்தான் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

https://youtu.be/eEtRTnOiBuc

 

Contact Us