தேனிசை செல்லப்பா இறக்கவில்லை: விஷமிகள் வெளியிட்ட தகவலை நம்பி ஏமார்ந்தவர்கள் பலர்…

சென்னையில் வசித்து வரும் பாசைப் பாடகர், தேனிசை செல்லப்பா அவர்கள் இறந்து விட்டதாக சில மணி நேரத்திற்கு முன்னதாக புரளி ஒன்று கிளம்பியுள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மையை தெரியாமல் பலர் இதனை ஷியார் செய்து வைரலாக பரப்பி விட்டார்கள். இதேவேளை இந்த தகவல் செந்தமிழன் சீமானுக்கும் செல்ல. அவரும் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோவை தொடர்பு கொண்டு, என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அதன் பின்னரே நிலமை மிகவும் சீரியசாக இருப்பதை உணர்ந்த, இளங்கோ செல்லப்பா. உடனடியாக ஒரு ஒலி நாடாவை வெளியிட்டுள்ளார். அதில் அப்பா நலமுடன் இருப்பதாகவும், மாவீரர் தினத்திற்காக 2 புதிய பாடலைப் படித்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே புரளிகளை நம்பவேண்டாம். ஆதார வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us