அதை மறக்க முடியாது.. இலங்கை தமிழர் புதிய குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழாவில் ஸ்டாலின் உருக்கம்

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றும், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்றும் கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதன்படி முதற்கட்டமாக 3510 வீடுகள் புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.142. 16 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் துவங்கி வைத்தார்.

இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூ.30 கோடி மதிப்பில் இலங்கை தமிழ் மக்களுக்காக இதர அடிப்படை வசதிகளுக்காக முதல்வர் அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் திரளானோர் கலந்துகொண்டனர். மு.க ஸ்டாலின் தற்போது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைக்கு , உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Contact Us