எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இலங்கையின் பல பகுதிகளில் எாிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்சார சபை பணியாளர்களின் போராட்டம் என்பனவே இதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.

“யுகதனவி“ மின்சார நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமையை ஆட்சேபித்து, மின்சாரசபை பணியாளர்கள், இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதேநேரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் துறைமுகத்துக்கு வந்துள்ள போதும் அவற்றை விநியோகிப்பதில் தாமதம் காரணமாக நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Contact Us