சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட இலங்கையர்களுக்கு திடுக்கிடும் தகவல் – வெளிவந்துள்ள புதிய செய்தி

இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கொரோனா தடுப்பூசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்தது என விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், குறித்த தடுப்பூசியின் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு 6 மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்களின் தரவுகள் மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகேவினுடைய ஆய்வுகளின் அடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் அதன் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு குறைவடையும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 – 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியை செயலூட்டியாக வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதே வேளை பைசர் மற்றும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி , அறிகுறிகள் தென்பட்டாலும் 6 மாத காலத்திற்கு நோய் தாக்கத்தின் தீவிர நிலைமையை அடைதல் மற்றும் மரணமடைதல் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு கட்டங்களாக சினோபார்ம் தடுப்பூசியை பெற்றிருந்தாலும் , மூன்றாம் கட்டமாக பைசர் அல்லது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Contact Us