ஒருவருக்காக இத்தனை பேரையா….? பூங்காவில் அடைக்கப்பட்ட மக்கள்…. குவிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள்….!!

சீனாவில் உள்ள பூங்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்த 34,000 பேரும் உள்ளேயே அடைக்கப்பட்டனர். இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டதில் “சீனாவிலுள்ள ஷாங்காய் மாகாணத்தில் Disneyland என்ற மனமகிழ் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பூங்காவை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டது. அதிலும் அங்கிருந்த 34,000 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் வெளிவர முயன்றதால் பூங்காவானது அடைக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்ட பிறகே வெளிவர முடியும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான சுகாதார பணியாளர்கள் வந்து கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us