என்ன விஷயமா இருக்கும்….? இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. வெளிவந்த தகவல்கள்….!!

ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலை பட்ருஷ்வ் என்பவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பு தலைவராக இருக்கிறார். இவர் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் உளவு அமைப்புகளை கண்காணிப்பதற்காகவும் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில் இவரை CIA என்றழைக்கப்படும் அமெரிக்கா உளவு அமைப்பின் தலைவரான வில்லியம் பார்ன்ஸ் சந்தித்துள்ளார்.

அதிலும் இந்த சந்திப்பானது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

Contact Us